» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அருட்தந்தையர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது: ஆயரிடம் மனு!
திங்கள் 10, நவம்பர் 2025 8:57:40 PM (IST)

தூத்துக்குடியில் அருட்தந்தையர்கள் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடக்கூடாது என்று ஆயரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி பாண்டியாதி பரதவர் நல தலைமை சங்கம் சார்பில் நிர்வாகிகள் மறைமாவட்ட ஆயரிடம் அளித்த மனுவில், "ஒரு திருத்தல இதழில், அத்திருத்தலத்தின் பெருமைகளையும், அங்கு நடந்த அற்புதங்களையும், பக்தர்களுக்கு கிடைத்த நற்பலன்களையும், அதன் சிறப்புகளையும் பற்றி எழுதுவதே சிறப்பானது ஆகும்.
தங்களின் சொந்த விருப்பு, வெறுப்பு அரசியல் பேச, அரசியல் பரப்புரை செய்ய திருத்தல இதழா கிடைத்தது? என்று பக்தர்களும், தூத்துக்குடி மறைமாவட்ட கத்தோலிக்க மக்கள் அனைவரும் கேள்வி எழுப்புகிறார்கள். அவ்வாறு பரப்புரை செய்யும் அருட்தந்தையர்கள் ஒருசார்பான அரசியல் பேச வேண்டாம் என்று எவரும் அவர்களை தடுக்கவில்லை.
மாறாக, ஒருசார்பான அரசியல் பேசவேண்டும் என்கின்ற விருப்பம் இருந்தால், தங்களின் அருட்பணியினை துறந்துவிட்டு, வீதிக்கு வந்து, மக்களோடு மக்களாக நின்று அரசியல் பேசினால் எவரும் யாரையும் விமர்சிக்க முடியாது என அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுவெளியில் விமர்சனம் செய்கின்றனர். இதில் உச்சபட்சமாக, இதுபோன்ற செயல்பாடுகளால் அருட்தந்தையர்களின் தனிப்பட்ட விஷயங்கள், பொதுவெளியில் விவாதிக்கப்படுவது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு உட்பட்ட பங்குகளில், அருட்தந்தையர்கள் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடக்கூடாது. திருத்தலங்கள் மற்றும் மறைமாவட்ட பங்குகள் ஒரு கட்சிக்கான அரசியல் மேடையாக ஒருபோதும் அனுமதிக்கப்படாது. சமூக மக்களுக்கான அரசியலை அவர்களே தீர்மானிப்பார்கள். மற்றவர்களின் விருப்ப அரசியலை சமூக மக்களிடம் திணிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
SivaSriNov 11, 2025 - 03:40:37 PM | Posted IP 172.7*****
உண்மை தான் இவர்கள் அரசியல் பேசவோ கட்சி மை ஆதரவு படுத்தவோ நடுநிலை படுத்தவோ வரவில்லை.இவர்கள் ஆன்மீக பணி ஆற்றுவதற்கு வந்தவர்கள்.14ஆண்டுகள் படிக்க வந்தவர்கள்.இவர்கள் சமூக பணி கூட ஆற்றக்கூடாது.ஆன்மீக பணி பற்றி பேசுவதாக இருந்தால்.ஆன்மீக பணியை துறந்து விட்டு செல்லலாம்.நன்றி ✋🏻
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் அரிவாளுடன் திரிந்த வாலிபர் கைது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:44:36 PM (IST)

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பலி: நிவாரணம் வழங்க உரிமையாளர் கோரிக்கை
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:34:38 PM (IST)

செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST)

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:22:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:59:21 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : இந்து முன்னணி அமைப்பினர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:41:03 PM (IST)











George Kuraliniyan DNov 11, 2025 - 09:45:22 PM | Posted IP 104.2*****