» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது கணக்குக்குழு 12ம் தேதி ஆய்வு : ஆட்சியர் தகவல்!

திங்கள் 10, நவம்பர் 2025 8:17:57 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 12ம் தேதி (புதன்கிழமை) சட்டமன்ற பொது கணக்குக்குழு 2024-26-ம் ஆண்டுக்கான ஆய்வு மேற்கொள்கிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற பொது கணக்குக்குழு குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. (ஸ்ரீபெரும்புதூர்) தலைமையில் 2024-26-ம் ஆண்டுக்கான ஆய்வை நாளை வருகிற 12ம் தேதி (புதன்கிழமை) மேற்கொள்கிறது. 

இதில், சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு (திருச்சுழி), எஸ். காந்திராஜன் (வேடசந்தூர்), ஏ.பி. நந்தகுமார் (அணைக்கட்டு) மற்றும் குழு உறுப்பினர்கள் அக்ரி.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி (போளூர்), அப்துல் சமது (மணப்பாறை), ராமசந்திரன் (தளி), எழிலரசன் (காஞ்சிபுரம்), அய்யப்பன் (கடலூர்), சந்திரன் (திருத்தணி), சரஸ்வதி (மொடக்குறிச்சி), சிவக்குமார் என்ற தாயகம் கவி (திரு.வி.க.நகர்), செந்தில்குமார் (பழனி), ஆர்.டி.சேகர் (பெரம்பூர்), எஸ்.சேகர் (பரமத்திவேலூர்), நத்தம் விசுவநாதன் (நத்தம்), பழனியாண்டி (ஸ்ரீரங்கம்), முகமது ஷாநவாஸ் (நாகப்பட்டினம்), ஜெயராம் (சிங்காநல்லூர்) ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

இந்த குழு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுப் பயணம் மேற்கொள்கின்றனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. எனவே பொதுமக்கள் சட்டமன்ற பொது கணக்கு குழுவினரிடம் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory