» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கணவரை பிரிந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திங்கள் 10, நவம்பர் 2025 8:04:41 AM (IST)
திருமணம் முடிந்த மூன்றே மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் முருகசிசுதா (21). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த காசிகோபி என்பவருக்கும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் முடிந்த மூன்றே மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக முருகசிசுதா தனது கணவரை பிரிந்து சென்று தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
அங்கிருந்தவாறு கடந்த இரு மாதங்களாக பிறைகுடியிருப்பில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இருப்பினும் அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த முருகசிசுதா திடீரென மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் குலசேகரன்பட்டினம் போலீசார் விரைந்து சென்றனர். முருகசிசுதாவின் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகசிசுதாவின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்பனை: வாலிபர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:10:02 AM (IST)

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)










