» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்த விஏஓ உயிரிழப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 7:59:49 AM (IST)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்த விஏஓ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி டூவிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (60). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரும், தளவாய்புரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் தூத்துக்குடி தபால் தந்தி காலனி 8-வது தெருவை சேர்ந்த பேச்சிராஜா (58) என்பவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது கோரம்பள்ளம் பகுதியில் மேம்பாலம் பணிக்காக வாகனங்கள் அணுகு சாலை வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன. அதில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி ரோட்டில் இருந்த சிமெண்ட் தடுப்பின் மீது கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பேச்சிராஜா படுகாயமடைந்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார். விபத்து குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்பனை: வாலிபர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:10:02 AM (IST)

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)










