» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கற்களை ஏற்றிவந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: பொதுமக்கள் கோரிக்கை!
திங்கள் 10, நவம்பர் 2025 7:41:47 AM (IST)

கோவில்பட்டி அருகே கற்களை ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் நேற்று கவிழ்ந்தது. டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கொடுக்காம்பாறையில் செயல்படும் கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவில்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விஜயாபுரி-தெற்கு திட்டங்குளம் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை:
கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றி வரும் லாரிகள் அதிவேகமாக செல்வதால், வேகத் தடைகளை கடந்து செல்லும்போது லாரியில் உள்ள கற்கள் சாலைகளில் சிதறுகின்றன.லாரியில் கொண்டு செல்லும் கற்களை தார்ப்பாய்களால் மூடாமல் செல்கின்றனர். இதனால், சாலைகள் சேதமடைவது மட்டுமின்றி, அந்த பகுதி வாழ் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இதைத் தடுக்க காவல் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்பனை: வாலிபர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:10:02 AM (IST)

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)










