» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் : மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா அறிவுறுத்தல்!
வெள்ளி 7, நவம்பர் 2025 7:58:02 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் நாள்தோறும் 180 டன் குப்பைகள் பொதுமக்கள் இடமிருந்து பெறப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு கையாளப்பட்டு வருகிறது. எனினும் சில இடங்களில் பொதுமக்கள் மாநகராட்சி வாகனங்களில் குப்பைகளை தரம் பிரித்து வழங்காமல் பொது இடங்களிலும், மழைநீர் வடிகால்களிலும் குப்பைகளை தூக்கி எறியும் சூழ்நிலை பரவலாக காணப்படுகிறது. இவ்வாறு எறியும் குப்பைகளால் மழைக்காலங்களில் மழை வெள்ளநீர் தேக்கமாகி கொசுக்கள் பரவும் அபாயமும் வடிகால்களில் குப்பைகள் போடுவதால் மழை நீர் வடிகால்கள் அடைத்து மழை நீர் செல்ல முடியாமல் மழைநீர் தேங்கும் நிலையும் ஏற்படுகின்றது. எனவே மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை பொது இடங்களில் பொது சுகாதாரக்கு கேடு ஏற்படும் விதமாக வீசப்படும் குப்பைகளுக்கும், மழை நீர் வடிகால்களில் குப்பைகளை தூக்கி எறியும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் குப்பைகளை மாநகராட்சி வாகனங்களில் தரம் பிரித்து வழங்கி பொது சுகாதாரம் பேணிடவும், கொசுக்கள் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், மழைக்காலங்களில் மழை நீர் வடிகால்களில் எளிதாக செல்ல வழி வகுத்திடவும் பருவ காலங்களில் உருவாகும் தொற்று நோய்களிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ளும் வகையில் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தர் காயம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:02:31 AM (IST)

அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் : கூடுதல் கோட்ட மேலாளர் தகவல்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:56:21 AM (IST)

பிரதமர் மோடிக்கு 2025 ஆம் ஆண்டுக்கான பாரதி விருது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:54:35 AM (IST)

திருச்செந்தூர் கோவில் யானையிடம் ஆசிபெற்ற பாகனின் மகள்கள்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:45:15 AM (IST)










