» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)
சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு எலெக்ட்ரிக் பைக் நிறுவனம் ரூ.63,000 வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தாலைச் சார்ந்த சேதுராமலிங்கம் என்பவர் தூத்துக்குடி கணேஷ் நகரிலுள்ள எலெக்ட்ரிக் பைக் நிறுவனத்திடம் இரு சக்கர வாகனம் வாங்க அணுகியுள்ளார். அவர் ஏற்கனவே இருந்த இரு சக்கர வாகனத்தை விற்று அந்த பணம் போக மீதி பணத்திற்கு பைனான்ஸ் ஏற்பாடு செய்து தருவதாக உறுதி கூறி பழைய இரு சக்கர வாகனத்தையும், அதன் ஆர்.சி.புத்தகத்தையும் எலெக்ட்ரிக் பைக் நிறுவனம் வாங்கி வைத்துக் கொண்டது.
பின்னர் சில நாட்கள் கழித்து புகார்தாரர் மேற்கண்ட நிறுவனத்தை அணுகிய போது உங்களுக்கு பைனான்ஸ் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். கிடைக்கவில்லை என்றால் ஏற்கனவே என்னிடம் பெற்ற பழைய வாகனத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் எலெக்ட்ரிக் பைக் நிறுவனத்தினர் வாகனத்தை விற்று விட்டதாகவும், அந்தப் பணம் பைக் நிறுவனத்தின் கணக்கிற்கு சென்று விட்டதாகவும் கூறியுள்ளனர்.
இதனால் புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் பழைய வாகனத்தை விற்பனை செய்த தொகையான வாகனத்திற்கு ரூ.28,000 சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.25,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.63,000ஐ ஆறு வார காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தர் காயம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:02:31 AM (IST)

அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் : கூடுதல் கோட்ட மேலாளர் தகவல்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:56:21 AM (IST)

பிரதமர் மோடிக்கு 2025 ஆம் ஆண்டுக்கான பாரதி விருது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:54:35 AM (IST)

திருச்செந்தூர் கோவில் யானையிடம் ஆசிபெற்ற பாகனின் மகள்கள்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:45:15 AM (IST)










