» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை!

வெள்ளி 7, நவம்பர் 2025 5:12:25 PM (IST)



தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 3பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் கடந்த 09.10.2025 கொலை முயற்சி வழக்கில் மேலவாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தர்மாகுட்டி மகன் ஆறுமுக நயினார் (23), ஸ்ரீவைகுண்டம் கால்வாய் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சுடலைகண்ணு (24) மற்றும் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிபாண்டி(23) ஆகிய 3பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மூவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (07.11.2025) புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை 119 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory