» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கட்டாரிமங்கலம் சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்
புதன் 5, நவம்பர் 2025 9:10:12 PM (IST)
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கட்டாரிமங்கலம் அருள்மிகு ஸ்ரீ அழகிய கூத்தர் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம் கட்டாரிமங்கலம் நடராஜரின் பஞ்ச விக்ரஹ ஸ்தலமாக விளங்கும் அருள்தரும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ அழகியகூத்தர் திருக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 9 மணி முதல் ஸ்ரீஅழகியகூத்தர் அருட்பணி மன்றத்தினரின் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.
தொடர்ந்து பல்வேறு யாகசாலை பூஜை,பகல் 11 மணிக்கு சுவாமிக்கு அன்னாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. பகல் 12.00 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை. நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழு நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் அருள்தரும் ஸ்ரீ ஞானாதீஸ்வரர் சமேத ஸ்ரீசிவசாமி அம்மாள் கோயிலில் ஐப்படி பெளர்ணமியை முன்னிட்டு அன்னா அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதர் சமேத ஸ்ரீ விசாலாட்சி அம்மன் கோயிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்ன அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 10ஆம் தேதி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 7, நவம்பர் 2025 9:01:20 PM (IST)

4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!
வெள்ளி 7, நவம்பர் 2025 8:22:18 PM (IST)

குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் : மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா அறிவுறுத்தல்!
வெள்ளி 7, நவம்பர் 2025 7:58:02 PM (IST)

புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:12:25 PM (IST)

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
வெள்ளி 7, நவம்பர் 2025 5:07:32 PM (IST)








