» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 5, நவம்பர் 2025 8:35:27 PM (IST)
கயத்தாறு பகுதியில் முன்விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
கடந்த 2019ம் ஆண்டு கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யனார்ஊத்து பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் அண்ணாமலை (43/2019) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்களான அண்ணாமலை என்பவரது மகன் உடையார் (76/25), ராமச்சந்திரன் மகன் கோதண்டராமர்(40/25) ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக அய்யனார்ஊத்து பகுதியில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் கயத்தாறு காவல் நிலைய போலீசார் உடையார் மற்றும் கோதண்டராமர் ஆகியோரை கைது செய்தனர்.இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம் இன்று (05.11.2025) மேற்படி உடையார் மற்றும் கோதண்டராமர் ஆகிய இருவருக்கும் தலா ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் ஆவுடையப்பன் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ரெங்கலட்சுமி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 10ஆம் தேதி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 7, நவம்பர் 2025 9:01:20 PM (IST)

4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!
வெள்ளி 7, நவம்பர் 2025 8:22:18 PM (IST)

குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் : மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா அறிவுறுத்தல்!
வெள்ளி 7, நவம்பர் 2025 7:58:02 PM (IST)

புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:12:25 PM (IST)

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
வெள்ளி 7, நவம்பர் 2025 5:07:32 PM (IST)








