» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் பாலியல் பலாத்காரம் செய்த ரவுடி கைது : மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!
புதன் 5, நவம்பர் 2025 8:24:43 PM (IST)

தெய்வச்செயல்புரத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் முருகன் (42). இவர் மீது மாமனாரை கொன்ற வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தற்போது, புதுக்கோட்டை அருகே உள்ள தெய்வச்செயல்புரம் பகுதியில் வசிக்கிறார்.
இந்த நிலையில், நேற்று அங்குள்ள காட்டுப்பகுதியில் கூலி வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம். அந்தப் பெண் கூச்சலிடவே, அந்தப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் விரைந்து வந்து அந்தப் பெண்ணை மீட்டு, ரௌடி முருகனை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து, புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, முருகனை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு முழுமையான மருத்துவ ஆலோசனை வழங்கவும் குற்றவாளிக்கு ஜாமீனில் வெளிவராத படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தெய்வச்செயல்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பி. பூமயில், மாவட்ட துணைச் செயலாளர் ஆர். இனிதா ஆகியோர் கண்டன உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் பெருமாள், முருகன், சின்னத்தம்பி, மற்றும் ஊர்ப் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 10ஆம் தேதி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 7, நவம்பர் 2025 9:01:20 PM (IST)

4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!
வெள்ளி 7, நவம்பர் 2025 8:22:18 PM (IST)

குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் : மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா அறிவுறுத்தல்!
வெள்ளி 7, நவம்பர் 2025 7:58:02 PM (IST)

புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:12:25 PM (IST)

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
வெள்ளி 7, நவம்பர் 2025 5:07:32 PM (IST)








