» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுகாதாரமற்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

புதன் 5, நவம்பர் 2025 8:12:48 PM (IST)



செந்தியம்பலம் பகுதியில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சேர்வைகாரன்மடம் ஊராட்சி செந்தியம்பலம் ஊரில் 1968 ஆம் ஆண்டு 15000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது ஊரில் 3000 மக்கள் வசித்து வருகின்றனர். 10 வருடங்கள் முன்பாகவே தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கடந்த 6 வருடங்களாக இந்த வாட்டர் டேங்க் கழுவ பட வில்லை. 

பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புதிய வாட்டர் டேங்க் கேட்டும் இதுவரை எதுவும் நடவடிக்கை இல்லை. கடந்த 6 மாத காலமாக தொட்டியின் உள்ளே வாழும் புறா, பல்லி, வெளவால் செத்து மிதந்து ஆகியவற்றின் எச்சங்கள் பறவையின் இறகு, இதர பாகங்கள் வீட்டு இணைப்பு குழாய் மூலம் அனைத்து வீடுகளுக்கும் தூர்நாற்றத்துடன் வருகின்றது. ஊராட்சி நிர்வாகத்திற்கும், முதலமைச்சரின் தனிபிரிவுக்கும் மனு அளிக்கபட்டு உள்ளது.

ஆனால், இதுவரை மக்களின் சுகாதார வாழ்வுக்கு எந்த வித உத்தரவாதமில்லாமல் நடந்து வருகிறது. எனவே தொற்று நோய்கள் பரவாமல் மக்களை விரைந்து காப்பாற்றிட மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் சமுக ஆர்வலர், இளைஞர் சங்கம் முன்னாள் தலைவர் பெ.ஆனந்தராஜ் வாதிரி கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory