» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே 7 அடி குழியில் விழுந்த சினைப் பசு மாடு மீட்பு

புதன் 5, நவம்பர் 2025 8:02:37 PM (IST)



தூத்துக்குடி அருகே 7 அடி குழியில் விழுந்த சினைப் பசு மாட்டினை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள சிறுபாடு விஜிபி நகரில் புதியதாக வீடு கட்ட வானம் தோண்டிய குழியில் ஆனந்தன் என்பவரது சினைப் பசு மாடு கால் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை அறிந்த பசு மாட்டின் உரிமையாளர் ஆனந்தன் சிப்காட் தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்தை தொடர்பு கொண்டு பசு மாட்டினை மீட்டுத் தருமாறு உதவி கோரினார்.

உடனடியாக சிப்காட் நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில், ஏட்டு இசக்கிராஜன், தவசி, ராம்குமார், முத்து ஜெயக்குமார் வெங்கிடசாமி ஆகிய தீயணைப்பு வீரர்கள் விரைந்து ஸ்தலம் வந்து 5 அடி நீள, அகலம், 7 அடி குழியில் விழுந்து கிடந்த சினைப் பசு மாட்டினை கயிறுகளால் கட்டி ஜேசிபி மூலம் பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். எவ்வித காயமுமின்றி சினைப் பசுமாட்டினை மீட்ட சிப்காட் தீயணைப்பு வீரர்களை அப் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory