» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோயிலில் அன்னாபிஷேகம் : திரளான பக்தர்கள் தரிசனம்

புதன் 5, நவம்பர் 2025 5:44:01 PM (IST)



தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு காலையில் கும்ப பூஜையும் தொடர்ந்து அருள்மிகு சங்கர ராமேஸ்வரருக்கு பால், தயிர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. 

பின்னர், சமைக்கப்பட்ட அன்னத்திற்கு சிறப்பு பூஜை தீப ஆராதனைக்கு பின்பு எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமிக்கு, 200 கிலோ அன்னம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலநது கொணடு சுவாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory