» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எஸ்ஐஆர் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
புதன் 5, நவம்பர் 2025 4:45:21 PM (IST)

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகள் தொடர்பாக திருவைகுண்டம் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 06 சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகள் நேற்று தொடங்கி இன்று 2வது நாளாக நடைபெற்று வருகின்றது. திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 2,27,530 வாக்காளர்கள் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 2,55,197 வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு, திருத்தப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இன்று (05.11.2025) பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது : தூத்துக்குடி மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி நடைமுறைகள் நேற்றையதினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்கான படிவங்களை வழங்கும் பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு வீடுகளுக்கு சென்று, அந்த வீடுகளில் உள்ள வாக்காளர்களிடம் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி வருகின்றனர். படிவங்களை வழங்கிய பின்னர், அதனை பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகளையும் அவர்களுக்கு எடுத்துக்கூறி, அதன் பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இரண்டு முறை வீடுகளுக்கு சென்று திருப்பி சேகரிப்பார்கள்.
நமது தூத்துக்குடி மாவட்டத்தில் 06 சட்டமன்ற தொகுதிகளில் 1627 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். நேற்றையதினம் இப்பணி தொடங்கப்பட்ட பின்னர், படிவங்கள் அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பான பயிற்சிகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் (Agents) அளிக்கப்பட்டிருக்கிறது.
அவர்களும் இந்த பணிகள் தொடர்பாக வாக்காளர்களுக்கு எடுத்து சொல்லி வருகின்றனர். படிவங்களை பூர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்பும் நல்கி வருகிறார்கள். மேலும் இப்பணிகள் ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார்.
திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பேட்மா நகரம், பேரூர், திருப்பபுளியங்குடி, திருவைகுண்டம், கருங்குளம், சந்தையடியூர், செய்துங்கநல்லூர் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்ட வல்லநாடு ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் மி.பிரபு, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தாஹிர் அகமது, ஸ்ரீவைகுண்டம் தேர்தல் வட்டாட்சியர் லோகநாதன் மற்றும் படிவங்கள் வழங்கும் பணியில் உள்ள அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 10ஆம் தேதி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 7, நவம்பர் 2025 9:01:20 PM (IST)

4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!
வெள்ளி 7, நவம்பர் 2025 8:22:18 PM (IST)

குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் : மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா அறிவுறுத்தல்!
வெள்ளி 7, நவம்பர் 2025 7:58:02 PM (IST)

புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:12:25 PM (IST)

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
வெள்ளி 7, நவம்பர் 2025 5:07:32 PM (IST)








