» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 56 மனுக்கள்!
புதன் 5, நவம்பர் 2025 4:34:29 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுகிறது.
அதன்படி புதன்கிழமையான இன்று (நவ.05) 56 மனுதாரர்கள் தங்கள் குறைகளை காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம் மற்றும் தீபு ஆகியோரிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
வாரந்தோறும் புதன்கிழமைகளில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீரக்கும் மனு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தெரிவிக்கலாம் என்பதனை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் லோடுமேன் தூக்கிட்டுத் தற்கொலை : போலீசார் விசாரணை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:33:17 AM (IST)

தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா நிறைவு : கனிமொழி எம்பி நெகிழ்ச்சி!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:12:56 AM (IST)

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)

சுதந்திர தினத்தில் சுடுகாட்டில் குடியேறி மக்கள் போராட்டம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:38:22 PM (IST)









