» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல்துறை சார்பாக கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:13:37 PM (IST)

தூத்துக்குடியில் காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் முன்பாக உள்ள விளையாட்டு வளாகத்தில் காவல்துறை பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் கிளப்பின் மாணவ மாணவிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் முன்னெடுப்பின் படி புதிய கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்த விளையாட்டு அரங்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும், காவல்துறை பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் கிளப்பின் மாணவர்களின் விளையாட்டு பயிற்சியை மேம்படுத்துவதற்காகவும், அவர்களை குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுக்க விளையாட்டு பயிற்சி மூலம் நல்வழிப்படுத்துவதற்காகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு அரங்கத்தை உருவாக்க உதவிய காவல்துறை அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி தொடர்ந்து இதனை சிறப்பாக பாராமரிக்குமாறு காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் : 2 பேர் உயிரிழப்பு
திங்கள் 8, ஜூன் 2026 10:06:07 AM (IST)

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பங்கள் வரவேற்பு - கோட்ட மேலாளர் அழைப்பு!
திங்கள் 8, ஜூன் 2026 8:42:53 AM (IST)

கோயில் உண்டியலை உடைத்துத் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 8, ஜூன் 2026 8:36:24 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைேமாதியது: 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
திங்கள் 8, ஜூன் 2026 8:24:55 AM (IST)

மதுப்பழக்கத்தால் குடும்பத் தகராறு மனைவி கோபித்துச் சென்றதால் கணவர் தற்கொலை!
திங்கள் 8, ஜூன் 2026 8:20:06 AM (IST)

பாலியல் புகாரைத் திரும்பப் பெற வலியுறுத்தி தவெக எம்.எல்.ஏ மிரட்டல் - இளம்பெண் பரபரப்பு பேட்டி!
திங்கள் 8, ஜூன் 2026 8:10:55 AM (IST)










