» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு ரூ.90,936 கோடி மதிப்பிலான முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

செவ்வாய் 4, நவம்பர் 2025 3:33:01 PM (IST)



தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு பசுமை தொலைநோக்கு பார்வை விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.90,936 கோடி மதிப்பிலான முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பெற்றது.

இதுகுறித்து வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "அக்டோபர் 27 முதல் 31 வரை மும்பையில் நடைபெற்ற இந்தியா கடல்சார் வாரம் 2025 நிகழ்ச்சியில் உலகின் முன்னணி நாடுகள், தொழில் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டு, கடல்சார் துறையில் ஒத்துழைப்பு மற்றும் புதுமைக்கான இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்

இந்த பின்னணியில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், துறைமுக மேம்பாடு, கப்பல் கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், நிலைத்தன்மை மற்றும் பிற சேவைகள் தொடர்பான முக்கிய முதலீட்டாளர்கள் மொத்தம் ₹90,936 கோடி மதிப்பிலான 29 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், பசுமை ஆற்றல் துறையில் உள்ள மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மொத்தம் ₹45,400 கோடி முதலீட்டை குறிக்கின்றன.

முதல் ஒப்பந்தம், Sembcorp குழும நிறுவனமான Green Infra Renewable Energy Farms Pvt. Ltd. (GIREFPL) உடன், பசுமை அமோனியா மற்றும் பிற ஹைட்ரஜன் சார்ந்த பொருட்கள் சேமிக்க ஒருங்கிணைந்து வளாகம் அமைப்பதற்காக ₹25,400 கோடி முதலீட்டில் கையெழுத்தானது. இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தம், ACME Green Hydrogen and Chemicals Pvt. Ltd. உடன், 1,200 MTPD பசுமை அமோனியா திட்டத்திற்காக ₹15,000 கோடி மதிப்பில் கையெழுத்தானது. மூன்றாவது புரிந்துணர்வு ஒப்பந்தம், CGS Energy Pvt. Ltd. உடன், 300 TPD பசுமை அமோனியா உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக ₹5,000 கோடி முதலீட்டில் கையெழுத்தானது. இந்த திட்டங்கள் தென் இந்தியாவில் துறைமுகத்தை எதிர்காலத்திற்கு தயாரான பசுமை ஹைட்ரஜன் மையமாக உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த நிகழ்வில் மேலும், இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM), கல்கத்தா இந்தியாவின் கடல்சார் துறையில் நிலைத்தன்மை மாற்றம் மற்றும் கார்பன் குறிப்பில் வ.உ.சி துறைமுகத்தின் பசுமை பயணம்' எனும் ஆய்வு அறிக்கை வெளியிட்டது. இந்த ஆய்வு, நிலைத்தன்மையுடன் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளுக்கு மாறுவதில் உள்ள சவால்களை வெளிப்படுத்தி, வ.உ.சி துறைமுகத்தின் பசுமை சாதனைகளையும், பசுமை ஹைட்ரஜன் முயற்சிகளுக்கான முக்கிய மையமாக அதன் வளருகின்ற நிலையையும் வெளிப்படுத்துகிறது.

இந்த ஆய்வு அறிக்கை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் வெளியிட்டார். இந்த நிகழ்வில், கப்பல் துறை அமைச்சகத்தின் செயலர் விஜய் குமார், கப்பல் துறைமுக துறை அமைச்சகத்தின இணைச் செயலர் எஸ். வெங்கடேசபதி, வ.உ.சி ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் மற்றும் IIM கல்கத்தாவின் பேராசிரியர் ரம்யா வெங்கடேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவின் நிறைவு நிகழ்ச்சியின் விருது வழங்கும் விழாவில் துறைமுகத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால பசுமை முயற்சிகளை துறைமுகத்தின் கண்காட்சி அரங்கில் வெளிகொண்டதற்காக வ. உ. சி. துறைமுகத்திற்கு பசுமை தொலைநோக்கு பார்வையாளர் (Green visionary) விருது வழங்கப்பட்டது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறைகளுக்கான அமைச்சர் சர்பானந்த சோனோவாலிடமிருந்து விருதை வ.உ.சி துறைமுகத்தின் சார்பாக, தலைவர் சுசந்தா குமார் புரோஹித் மற்றும் துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன் ஆகியோர் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறைகளுக்கான இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் மற்றும் கப்பல் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் விருதைப் பெற்றுக்கொண்டனர். 

வ. உ. சி துறைமுக ஆணையத்தின் தலைவர், சுசந்தா குமார் புரோஹித் செய்தியாளர்களிடம் கூறுகையில், வ.உ.சி துறைமுகம் பல்வேறு முதலீட்டாளர்கள் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது, இதன் மூலம் துறைமுகத்தின் உள் கட்டமைப்புகள் மேம்படுவது மட்டுமல்லாமல், பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் வரவேற்கிறோம் என்று தெரிவித்தார். அத்துடன் பசுமை எரிசக்தி முயற்சிகள் மற்றும் வெளி துறைமுகத்தின் வளர்ச்சியுடன் வ.உ.சி துறைமுகத்தை எதிர்காலத்தின் நவீன துறைமுகமாக மாற்ற நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்" என்று கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory