» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாநில ஹஜ் ஆய்வாளர்கள் பணி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்

செவ்வாய் 4, நவம்பர் 2025 3:11:26 PM (IST)

சவூதி அரேபியாவில் பணிபுரிய மாநில ஹஜ் ஆய்வாளர்கள் தற்காலிக பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்றறிக்கை எண்.13, நாள் 13.10.2025-ல், ஹஜ் 2026-ல் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப, நிகர்நிலை மூலம் (online) விண்ணப்பங்களை வரவேற்கிறது.

தற்காலிக பணிக்காலம் 13.04.2026 முதல் 05.07.2026 வரை சுமார் இரண்டு மாத காலமாகும்.  மத்திய/மாநில அரசு ஊழியர்கள், துணை இராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதிவாய்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள், விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். 

மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக்காலமாக கருதப்படும். இப்பணிக்காக நிகர்நிலை மூலம் (online) விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமனமுறை ஆகியன மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியில் (www.hajcommittee.gov.in) அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory