» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பட்டினமருதூரில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சுடுமண் பெண் தெய்வ சிலை கண்டெடுப்பு

செவ்வாய் 4, நவம்பர் 2025 10:59:53 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தின் தொல்லியல் களமான பட்டினமருதூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண்ணால் செய்யப்பட்ட பெண் தெய்வ சிலை கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து, தூத்துக்குடியைச் சேர்ந்த வரலாறு, தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறியதாவது: தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தொல்லியல் களமாக தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரின் சுமார் 300ஏக்கர் பரப்பளவு பகுதியில் நேற்று ஊர்மக்கள் வாயிலாக கண்டெடுக்கப்பட்ட சிறிய  அளவிலான 5.4செ.மீ உயரம் கொண்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட பெண் உருவத்தின் நெஞ்சு மார்பு பகுதி வரையிலான இரு கரங்கள் இல்லாத சிதைவு மிகுந்த அழகான ஆபரண கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன், சிரசில் அழகிய கொண்டையுடன் காணப்படுகிறது. 

எங்கள் ஒப்பீடு ஆய்வின் படி இதன்  முழு உருவம் 17 -18 செ.மீ(7") உயரம் கொண்டதாக இருந்திருக்கலாம் என்பதும், இதன் உருவ அமைப்பு நம் ஐம்பெரும் காப்பியங்களில் குறிப்பிடப்படும் நமது தாய் தெய்வமான சம்பாபதி அம்மன் ஆலய சதுக்க பூதம் போன்று தென்படுகிறது. ஏற்கனவே இதே போன்ற இரண்டு வேறு அமைப்பு கொண்ட பெண் தெய்வம் போன்ற சுடுமண் சிற்பங்கள் பட்டினமருதூரில் கண்டெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பதும்,இதேபோன்ற சில சுடுமண் சிற்பங்கள் பூம்புகார், கீழடி போன்ற பகுதிகளில் கிடைக்கப்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மக்கள் ஒப்படைத்த சிறிய கருப்பு நிற சாய்வு முக்கோண வடிவம் மற்றும் வழுவழுப்பான  3.2செ.மீ அகலம் கொண்ட  வாய்ச்சி(Adze) என சீவகசிந்தாமணியில் (2825, 2689) குறிப்பிடப்படும் மரம், செங்கல் செதுக்கப் பயன்படுத்தப்பட்ட தொன்மையான மற்றும் கடினமான கல்லில்(இயற்கை/ செயற்கை) செய்யப்பட்ட 'வாய்ச்சி' ஆயுதத்தின் பக்கவாட்டில் காணப்படும் 9.0மி.மீ நீளம் கொண்ட மிக நுட்பமான ஒற்றை மீன் சின்னமானது இரட்டை 'நீண்ட கொம்புகள் கொண்ட பசுமீன்(Longhorn cowfish)' போன்று உள்ளது என்பதும், 

அடிப்பக்கம் காணப்படும் நான்கு எழுத்துக்களில் இரண்டாம் சங்ககால தொல் தமிழ் எழுத்தான 'ய' வினை நான்காவது எழுத்தாக உள்ளடக்கி, தமிழி(பிராமி) மற்றும் மீள் வட்டெழுத்து ஆகியவையும் கலந்து 'குல புயங்கம்(ன்)' என பொருள் வருவது போல் உள்ளது என்பதும், இந்த கருவியின் காலகட்டம் மற்றும் ஒற்றை கொம்புகள் உள்ள பசுமீன் சின்னம் ஆகியவற்றின் மீதான புதிய பார்வைகளை நமக்கு உணர்த்துகிறது எனலாம்.

இந்த நீண்ட கொம்புகள் உள்ள பசுமீன் பொதுவாக பவளப்பாறைகள் பகுதியில் வாழக்கூடிய ஒருவகை அழகான மற்றும் ஆபத்தான மீன் இனம். ஏனெனில் இவை பவளப்பாறைகள் காவலாளி போன்று செயல்படுவது மட்டுமல்லாமல் தங்களை காத்துக்கொள்ள விஷ திரவங்களை தங்கள் உடம்பில் இருந்து வெளியேற்றி எதிரியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் தன்மை கொண்ட ஒப்பீடு இல்லா ஓர் மீன் வகை. 

இவற்றின் முன் முக அமைப்பு அழகான பசுமாடு போன்றது என்பதாலும், பாண்டியர்கள் (தமிழர்களின்) முக்கிய வாழ்வாதாரமாக விளங்கிய முத்து வளம் மற்றும் மீன்வளம் பெருகிட காரணியாக விளங்கிய பவளப்பாறைகள் காவலாளியாக விளங்குகிறது என்பதாலும், நம் பசு நேச முன்னோர்களான பாண்டியர்கள் இத்தகைய இந்திய பசிபிக் மற்றும் செங்கடல் பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரியவகை  ஒற்றை பசுமீன் சின்னங்களை பயன்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முறையான கரிம வேதியியல் ஆய்வு செய்திட நம் பாண்டியர்கள் வரலாற்றின் இருண்ட காலம் தொடர்பான இருள் விலகிட முக்கிய விளக்காக விளங்கி நமக்கு வழிகாட்டுவது திண்ணம். இது தொடர்பாக மாவட்ட தொல்லியல் துறையின் பொறுப்பு அதிகாரியிடம் தகவல்கள் பரிமாறப்பட்டது. அவர் கூறுகையில் இவைகள் முக்கிய ஆதாரமாக விளங்கும் தன்மை கொண்டது என்றும் நமது பட்டினம் மருதூர் தொடர்பான அகழாய்வு பணிக்கான ஒப்புதல் மத்திய தொல்லியல் குழுவினர் வாயிலாக வழங்கப்பட்டு விடும் எனவே அவர்கள் வெகு விரைவில் களம் கண்டு இதுவரை கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் எச்சங்களையும் கணக்கில் கொள்வோம் என்றார்.

எனவே இந்த மழைக்காலம் முடியும் தருவாயில் நமது தென்மதுரை (ரா) என நாங்கள் கருதும் தருவைக்குளம் - பட்டினமருதூர பகுதியில் பிரபஞ்சத்தின் கருணையால் ஆரம்பம் ஆகி நம்மை வெளிவரும் தொல்லியல் எச்சங்கள் மற்றும் கலைப்பொருட்கள் வாயிலாக ஆச்சரியம் அடைய செய்து உலகிற்கு தமிழர்களின் கலாச்சார மேம்பாடு உண்மை உலகுணர செய்வது திண்ணம் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory