» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரயில் மீது ஏறி ரீல்ஸ் எடுத்த கல்லூரி மாணவர் பரிதாப சாவு : 2 பேர் காயம்

ஞாயிறு 2, நவம்பர் 2025 9:13:45 PM (IST)



தூத்துக்குடியில் சரக்கு ரயில் மீது ஏறி ரீல்ஸ் எடுத்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். மேலும்2 பேர் தீக்காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி அண்ணா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் நீதியரசன் மகன் அருண் (18), இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் விலங்கியல் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர்கள் ராஜகோபால் நகர் 4வது தெருவை சேர்ந்த சசிகுமார் மகன் கவின் 14, சண்முக சேகர் மகன் ஹரிஷ் 17 ஆகிய 3பேரும் இன்று மாலை 5.30 மணி அளவில் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் வண்டியின் காட் வேனில் ஏறி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மேலே சென்ற மின்சார வயரில் கைப்பட்டதில் மின்சாரம் தாக்கி அருண்குமார் தூக்கி வீசப்பட்டு பலத்த தீக்காயம் அடைந்தார். மேலும் கவின், ஹரிஷ் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக 3 பேரையும் வேன் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அருண்குமாரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் 2பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து

srinivasanNov 3, 2025 - 11:04:20 AM | Posted IP 172.7*****

suya puthi illanalum sol puthi velai seyaianuum . illana tdhuthan nadkum .RIP

S சந்திரசேகரன்Nov 3, 2025 - 06:37:25 AM | Posted IP 104.2*****

படித்த இளைஞர்கள் இவவிதம் பாதுகாப்பு உணர்வின்றி செயல்படுவது வேதனை.

BalaNov 2, 2025 - 10:54:05 PM | Posted IP 104.2*****

yala savu savula..

DareNov 2, 2025 - 10:39:28 PM | Posted IP 162.1*****

ரொம்ப நல்லது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory