» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் : உப்பு ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

ஞாயிறு 2, நவம்பர் 2025 9:43:04 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று தன்பாடு உப்பு ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு சங்கத்தின் சார்பில் அனுப்பியுள்ள மனுவில், "தென் மாவட்டங்களில் தூத்துக்குடி வர்த்தகத்திற்கு மிகவும் புகழ்பெற்ற நகரமாக திகழ்ந்து வருகிறது. தூத்துக்குடியில் துறைமுகம், அனல்மின் நிலையம், பல்வேறு தொழிற்சாலைகள், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், உப்பு ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 

தூத்துக்குடியில் இருந்தும் அதிக அளவில் வர்த்தக நோக்கத்துடன் பெருமளவு தொழில் முனைவோர்கள் சென்னை சென்று வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க காத்திருப்போர் பட்டியல் நீண்டு வருவதால் சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும்.

லோக்மான்ய திலக் - மதுரை வாராந்திர ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடியிலிருந்து சென்னை வழியாக ஹைதராபாத்துக்கு இரவு நேர இரயில் இயக்கப்பட வேண்டும். இதன் மூலம் மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா பயணிகள் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும்.

தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு மெமு ரயில்கள் இயக்க வேண்டும். திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக தினமும் தூத்துக்குடிக்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும். இதன் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் மிகவும் பயன் உள்ளதாக அமையும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

S சந்திரசேகரன்Nov 3, 2025 - 06:47:28 AM | Posted IP 104.2*****

தூத்துக்குடி, மணியாச்சி, கடம்பூர் நிலையங்கள் தெற்கு ரயில்வேயால் புறக்கணிக்கப்படுகின்றன. தமிழக MPகளின் அக்கறையின்மை!

அதானேNov 2, 2025 - 06:47:25 PM | Posted IP 104.2*****

கனிமுளி விமான நிலையத்தை தான் தேர்ந்தெடுத்தாரே ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory