» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி!
வியாழன் 16, அக்டோபர் 2025 5:18:57 PM (IST)
தூத்துக்குடியில் கல்லறைத் தோட்டம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி அண்ணா நகர் 10வது தெருவைச் சேர்ந்தவர் பாதாளமுத்து மகன் சுடலைமுத்து (18). இவர் கடந்த ஆறு மாதமாக வீட்டுக்கு செல்லாமல் சாலையில் சுற்றி திரிந்து வந்தாராம். இநத நிலையில், இன்று மதியம் அவர் ஜார்ஜ் ரோட்டில் உள்ள கல்லறை தோட்டத்துக்குள் சென்றுவிட்டு வெளியே வருவதற்காக சுவர் ஏறி குதிக்க முயன்றுள்ளார்.
அப்போது அருகில் இருந்த மின்வயர் மீது அவரது உடல் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 10ஆம் தேதி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 7, நவம்பர் 2025 9:01:20 PM (IST)

4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!
வெள்ளி 7, நவம்பர் 2025 8:22:18 PM (IST)

குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் : மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா அறிவுறுத்தல்!
வெள்ளி 7, நவம்பர் 2025 7:58:02 PM (IST)

புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:12:25 PM (IST)

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
வெள்ளி 7, நவம்பர் 2025 5:07:32 PM (IST)








