» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சுதேசி கப்பல் தினம் : வ.உ.சி. சிலைக்கு இந்து முன்னணி மரியாதை!

வியாழன் 16, அக்டோபர் 2025 4:53:52 PM (IST)



தூத்துக்குடியில் சுதேசி கப்பல் இயக்கிய தினத்தை முன்னிட்டு இந்து முன்னணியினர் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆங்கிலேய ஏகாபத்தியத்திற்கு எதிராக வ.உ.சிதம்பரம் பிள்ளை 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். இந்து முன்னணியின் கிளை அமைப்பான இந்து வியாபாரிகள் நலச்சங்கம் ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் தேதி வணிகர் தினமாக கொண்டாடி வருகிறது. 

இதையொட்டி இன்று தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் முன்பு அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு மாநில இந்து வியாபாரிகள் சங்கத் தலைவரும் இந்து முன்னணி மாநில துணைத் தலைவருமான வி.பி. ஜெயக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது 

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், மாநகர மாவட்ட செயலாளர் சரவணகுமார், மேற்கு மண்டல துணைத் தலைவர் சுடலைமணி, கிழக்கு மண்டல செயலாளர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

வெங்கடேஷ்Oct 17, 2025 - 11:43:31 AM | Posted IP 172.7*****

இந்த செயல் மிக அருமையாக இருக்கிறது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory