» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் : காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 16, அக்டோபர் 2025 4:09:26 PM (IST)
வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி தற்போது அதிகளவில் நடைபெற்றுவருவதால் அதனை தவிர்ப்பது மற்றும் தற்காத்துக் கொள்வது குறித்து பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியி்டுள்ளது.
தற்போது வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடிகள் பெருமளவில் பரவி வருகின்றன. இந்த மோசடி வங்கிகள் மற்றும் அரசு அமைப்புகளின் பெயரில் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இம்மாதிரியான போலி செய்திகள் பொதுவாக "Banks", "Aadhaar Updates","Traffic e-Challan Payment" போன்ற பெயர்களில் நம்பகமான குழுக்கள் போன்று போலி வாட்ஸ்அப் குழுவில் இருந்து அனுப்பப்படுகின்றன. அந்த குழுக்களில் உள்ள மோசடியாளர்கள் "Rewards" , "KYC updates", "cashback offers" என்ற பெயரில் போலியான APK file அல்லது லிங்ஸ் அனுப்புவார்கள்.
அதனை உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்தால் மோசடியாளர்கள் உங்கள் செல்போனை ஹேக் செய்து அதன் மூலம் உங்கள் உங்கள் வாட்ஸ்அப் செய்திகள், வங்கி கணக்கு விவரங்கள், OTP மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடியும் மேலும் உங்கள் whatsapp கணக்கை பயன்படுத்தி உங்கள் செல்போன் contact-ல் உள்ள நபர்களுக்கும் அந்த மோசடியை பரப்புகின்றனர்.
எனவே இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத apk அப்ளிகேஷன்கள் வாட்ஸ்அப், மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் வழியாக வரும் எந்த ஒரு பயன்பாட்டையும் அது நண்பர் அல்லது குடும்பத்தினர் அனுப்பியதாக இருந்தாலும் கூட நிறுவ வேண்டாம்.
இதிலிருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் : இதுபோன்ற APK file அல்லது லிங்க்-ஐ திறக்கவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ கூடாது.
வாட்ஸ்அப்பில் இரு நிலை உறுதிப்படுத்தலை (Two-Step Verification) நிறுவி அதன் வழிமுறைகளை பின்பற்றி PIN அமைப்பை பயன்படுத்தி பாதுகாக்கலாம். உங்கள் கணக்கு மூடப்பட்டாலோ அல்லது ஹேக் செய்யப்பட்டாலோ உடனடியாக [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி அல்லது https://www.whatsapp.com/contact/?subject=messenger என்ற இணைப்பை பார்வையிடவும்.
எந்தவொரு நிதி இழப்பு அல்லது இணைய மோசடி நடந்திருந்தால் உடனடியாக 1930 எண்ணிற்கு அல்லது www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கவும். எனவே இதுபோன்ற சைபர் மோசடிகளிலிருந்து எச்சரிக்கையா இருந்து தற்காத்துக் கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக புதிய அமைச்சரவை: தூத்துக்குடி எம்.எல்.ஏ ஸ்ரீநாத்திற்கு மீன்வளத்துறை ஒதுக்கீடு!
வியாழன் 21, மே 2026 12:50:33 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் என்டிபிஎல் நிறுவனத்தின் சார்பில் புதிய அரங்குகள் திறப்பு!
வியாழன் 21, மே 2026 12:25:31 PM (IST)

தேசிய நெடுஞ்சாலையில் பைக் விபத்து: வாலிபர் பலி!
வியாழன் 21, மே 2026 11:54:05 AM (IST)

அரசு உதவிபெறும் பள்ளிகளில் வசூல் வேட்டை : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்!
வியாழன் 21, மே 2026 11:30:58 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

தூத்துக்குடியில் பெண் வெட்டிக் கொலை: 2பேர் கைது!
வியாழன் 21, மே 2026 10:52:28 AM (IST)










