» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய நல்ல ஆலோசனை மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது

வெள்ளி 3, அக்டோபர் 2025 5:02:23 PM (IST)



தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டியில் தூய நல்ல ஆலோசனை மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டியில் அமைந்துள்ள தூய நல்ல ஆலோசனை மாதா ஆலய 136ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று மாலை 6.30 மணிக்கு கொடி பவனி நடைபெற்றது. பின்னர் மறைமாவட்ட முதன்மைகுரு ரவிபாலன் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து பனிமய அன்னை ஆலய பேரருட்தந்தை ஸ்டார்வின் மறையுரை ஆற்றினார். இந்நிகழ்வில் திரளான இறை மக்கள் கலந்து கொண்டனர் 

திருவிழாவில் தினமும் காலை நவநாள் திருப்பலியும் மாலையில் நற்கருணை ஆசீரும் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான நற்கருணை பவனி. சனிக்கிழமை நடைபெறும். ஞாயிறு காலை திருவிழா ஆடம்பர திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னையின் புதிய ஆலயம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அன்னையின் தேர் பவனி நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை வினித் ராஜா தலைமையில ஊர் நிர்வாகிகள், இறை மக்கள் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory