» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்குகள் மோதியதில் ஒருவர் பலி: 3பேர் காயம்!
புதன் 1, அக்டோபர் 2025 8:33:39 AM (IST)
சாத்தான்குளம் அருகே இரு பைக்குகள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பெண்கள் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரைச் சேர்ந்த தேவசாமி ஆத்தி (60) என்பவர், தனது மகன் பிரகாஷ் (25) என்பவருடன், சாத்தான்குளம் வழியாக திசையன்விளைக்கு நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தார். கடக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் மனைவி புனிதா ஜென்சி (32) என்பவர் ஒரு பெண்ணுடன் திசையன்விளையிலிருந்து சாத்தான்குளத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
சாத்தான்குளத்தை அடுத்த அரசூர் தனியார் பொறியியல் கல்லூரி அருகே இரு பைக்குகளும் மோதிக்கொண்டனவாம். இதில், 4 பேரும் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த தேவசாமி ஆத்தியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார். தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஸ்டெல்லாபாய் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி பள்ளிக்கு ரூ.70 ஆயிரத்தில் புதிய இரும்பு வாயிற்கதவு: ரோட்டரி சங்கம் வழங்கல்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:40:41 AM (IST)

தூத்துக்குடியில் லோடுமேன் தூக்கிட்டுத் தற்கொலை : போலீசார் விசாரணை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:33:17 AM (IST)

தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா நிறைவு : கனிமொழி எம்பி நெகிழ்ச்சி!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:12:56 AM (IST)

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)









