» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

செவ்வாய் 30, செப்டம்பர் 2025 9:52:26 PM (IST)



தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்ய வந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடியில் ஆயுத பூஜையை முன்னிட்டு, பூ மார்க்கெட் பகுதியில் இன்று மாலை வியாபாரம் களைகட்டி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மைக்ரான் குறைந்த பாலித்தீன் பைகள் வைத்திருந்ததாக கடையில் இருந்து பறிமுதல் செய்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து பூவாங்க வந்த பொதுமக்களும் வியாபாரிகளுக்கு ஆதரவாக பேசினர். இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர் தூத்துக்குடியில் நவராத்திரி நிறைவு நாளான நாளை சரஸ்வதி பூஜை நடைபெற உள்ள நிலையில் அதிகாரிகள் இதுபோன்று தொல்லை கொடுப்பதாக வியாபாரிகள் புகார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

அதுOct 1, 2025 - 07:42:57 AM | Posted IP 162.1*****

துட்டு பயலுக நம்ம ஊரில் அதிகம், பிச்சை காசு போட்டால் போய் விடுவார்கள்

ராஜாSep 30, 2025 - 10:10:53 PM | Posted IP 172.7*****

வியாபாரிகள் வரிகட்டி தான் வியாபாரம் செய்கிறார்கள். வேண்டுமென்றே மாநகராட்சி அதிகாரிகள் வியாபார நேரத்தில் அராஜகம் செய்கிறார்கள். திமுகவுக்கு ஓட்டு கிடையாது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory