» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
துறைமுகத்தில் வெல்டிங் பணிக்காக சென்ற 3பேர் உயிரிழப்பு : தூத்துக்குடியில் சோகம்!!
புதன் 17, செப்டம்பர் 2025 5:38:37 PM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் பார்ஜ் படகில் வெல்டிங் பணிக்காக சென்ற 3பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து மாலத்தீவுக்கு கருங்கல், ஜல்லி கற்கள், கட்டுமானப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவை, பார்ஜர்கள் எனப்படும் ராட்சத இரும்பு மிதவை கலன்கள் மூலம் மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த மிதவை கலன்களின் கீழ்பகுதியில் உள்ள தொட்டிகள் அவ்வப்போது திறந்து சுத்தம் செய்யப்படும்.
இந்நிலையில், மாலத்தீவுக்கு கருங்கற்களை இறக்கிவிட்டு தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு வந்த ஒரு ஷிப்பிங் நிறுவனத்தின் மிதவை கலனின் வெல்டிங் பணிக்காக திருநெல்வேலி மாவட்டம் உவரியைச் சேர்ந்த தொழிலாளி சிரோன்ஜார்ஜ் (32) மிதவை கலனின் கீழ்பகுதியில் உள்ள தொட்டிக்குள் இறங்கியதாக கூறப்படுகிறது. அவரை பின்தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத் தொழிலாளி சந்தீப்குமார் (27), தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயலைச் சேர்ந்த ஜெனிஸ்டன் தாமஸ் (35) ஆகியோரும் சென்றனர்.
மூவரும் வெகு நேரமாகியும் தொட்டிக்குள் இருந்து வெளியே வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த சக தொழிலாளர்கள் காவல் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மத்திய பாகம் போலீசார், மரைன் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று தொட்டியின் மூடியை வெல்டிங் இயந்திரத்தால் அறுத்தி அகற்றினர்.
பின்னர் தொட்டிக்குள் இறங்கி மூவரையும் தேடினர். ஒரு மணி நேரத் தேடலுக்குப் பிறகு தொழிலாளிகள் மூவரையும் சடலமாக மீட்டனர். இதையடுத்து 3 பேரின் உடல்களும் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மிதவை கப்பலின் தொட்டி நீண்ட நாட்களாக மூடி இருந்ததால், ஆக்சிஜன் இல்லாமல் மூச்சுத்திணறி 3 ஊழியர்களும் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு, டவுன் கூடுதல் எஸ்.பி. மதன், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் பாஸ்கர், மரைன் காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி : ஆணையர் ப்ரியங்கா துவக்கி வைத்தார்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:36:16 PM (IST)

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.22,970 பறிமுதல்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:14:15 PM (IST)

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் பொறுப்பேற்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:24:53 PM (IST)

மாயமான கல்லூரி மாணவியை மீட்கக் கோரி டிஎஸ்பி அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா!
வெள்ளி 17, ஜூலை 2026 8:21:32 PM (IST)

தூத்துக்குடியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 8:04:33 PM (IST)

சிசு மரணங்களைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
வெள்ளி 17, ஜூலை 2026 5:42:07 PM (IST)








