» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரதமர் மோடி பிறந்த நாள் விழா இரத்ததான முகாம்!

புதன் 17, செப்டம்பர் 2025 12:37:11 PM (IST)



தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிதம்பர நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது. முன்னாள் மத்திய அரசு வழக்கறிஞர் எஸ் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ரத்ததானம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில மருத்துவ அணி செயலாளர் ருக்மணி, மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவி உஷா தேவி, ஆன்மிக பிரிவு தலைவி வெள்ளத்தாய் அண்ணராஜ், மண்டல தலைவர்கள் ராஜேஷ் கனி, லிங்க செல்வன், சுதாகர், மாதவன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் ரவீந்திர பாலாஜி, மாவட்ட பொருளாளர் பரமசிவம், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன், நிர்வாகிகள் சொக்கலிங்கம், செந்தில் ஆறுமுகம், சுடலைமுத்து, கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory