» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் எஸ்பி ஆலோசனை!!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 5:51:23 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குற்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்காக ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் சார்பு ஆய்வாளர்கள்/சிறப்பு சார்பு ஆய்வளார்கள் ஒருவர் நியமிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 60 குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் (Child Welfare Officer) செயல்பட்டு வருகின்றனர்.
மேற்படி குழந்தைகள் நல காவல் அலுவர்களுக்கான அறிவுரைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆல்பர்ட் ஜான் தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார்களை கையாள்வது குறித்தும், அவர்களை கையகப்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது குறித்தும், இளைஞர் நீதி குழுமத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுத்துரைத்து அறிவுரைகள் வழங்கினார்.
இதில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தீபு, தூத்துக்குடி சிறப்பு சிறார் காவல் அலகின் பொறுப்பு அதிகாரியும் மாவட்ட குற்றப் பிரிவு-I காவல் துணை கண்காணிப்பாளருமான ராஜூ உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)

சுதந்திர தினத்தில் சுடுகாட்டில் குடியேறி மக்கள் போராட்டம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:38:22 PM (IST)

சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. நற்சான்றிதழ்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:53:54 PM (IST)

தி பார்க் கிண்டர்கார்டனில் 80-வது சுதந்திர தின விழா!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:44:39 PM (IST)









