» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடைகளில் திடீர் சோதனை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!
புதன் 3, செப்டம்பர் 2025 5:29:26 PM (IST)

நாகலாபுரம் கிராம ஊராட்சியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி புதூர் ஊராட்சி ஒன்றியம், நாகலாபுரம் கிராம ஊராட்சியில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜன், தினகரன், தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் கண்ணன், ஊராட்சி செயலர் காமராஜ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கடைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஐந்து கடைகளுக்கு ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது. இதில் தூய்மை காவலர்கள் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக புதிய அமைச்சரவை: தூத்துக்குடி எம்.எல்.ஏ ஸ்ரீநாத்திற்கு மீன்வளத்துறை ஒதுக்கீடு!
வியாழன் 21, மே 2026 12:50:33 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் என்டிபிஎல் நிறுவனத்தின் சார்பில் புதிய அரங்குகள் திறப்பு!
வியாழன் 21, மே 2026 12:25:31 PM (IST)

தேசிய நெடுஞ்சாலையில் பைக் விபத்து: வாலிபர் பலி!
வியாழன் 21, மே 2026 11:54:05 AM (IST)

அரசு உதவிபெறும் பள்ளிகளில் வசூல் வேட்டை : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்!
வியாழன் 21, மே 2026 11:30:58 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

தூத்துக்குடியில் பெண் வெட்டிக் கொலை: 2பேர் கைது!
வியாழன் 21, மே 2026 10:52:28 AM (IST)










