» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
புதன் 3, செப்டம்பர் 2025 3:37:09 PM (IST)
நெல்லை மாவட்டத்தில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் கைதான 2 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் கொலை முயற்சி, மிரட்டல் மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட சிங்கிகுளம், முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன்களான முத்துமாரி (21), ஞான பாண்டியன் (19) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை முயற்சி, மிரட்டல் மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கவனத்திற்கு வந்தது.
இதனையடுத்து அவர் மேற்சொன்ன 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவின்பேரில், முத்துமாரி, ஞான பாண்டியன் ஆகிய இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் முதன்முறையாக வ.உ.சி. துறைமுகத்தில் ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு
வெள்ளி 6, பிப்ரவரி 2026 9:35:22 PM (IST)

பெண்ணை தாக்கி கொலை செய்த வழக்கில் 2பேர் கைது!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:31:33 PM (IST)

அம்பையில் புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:10:18 PM (IST)

ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம்: கல்லூரி மாணவர்கள் ஆர்வம்
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:02:05 PM (IST)

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு புதிய திட்டம்: மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:53:16 PM (IST)

புதூரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் திறப்பு விழா!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:23:24 PM (IST)









