» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சூழல் சிங்கம்: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்
புதன் 3, செப்டம்பர் 2025 3:16:52 PM (IST)

தூத்துக்குடியில் 'சூழல் சிங்கம்' எனும் மின் கழிவு சேகரிப்பு குறித்தான இணையதளத்தை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் மின்-கழிவு சேகரிப்பை எளிமைப்படுத்தும் நோக்கில் டீப் சைக்கிள் ஹப் (Deep Cycle Hub) ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியுள்ள சூழல் சிங்கம் முன்னெடுப்பை உள்ள சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார்.
துவக்க விழாவில் பேசிய கனிமொழி எம்.பி. சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மின் கழிவு சேகரிப்பு இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தினார். தங்களுடைய மின் கழிவுப் பொருட்களுடன் செல்பி எடுத்து சமூக ஊடகங்களில் பகிரவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை விழிப்புணர்வு இயக்கத்தில் சேர ஊக்குவிக்கவும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் விழிப்புணர்வு மற்றும் மின்-கழிவு சேகரிப்பு மின்சார வாகனத்தையும் கொடியேற்றி துவக்கி வைத்தார். டீப் சைக்கிள் ஹப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முன் முயற்சிகளில் ஒன்றான சூழல் சிங்கம், சமூக அக்கறையுடன் செயல்படும் தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட புத்தொழில் களம் திட்டத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. டீப் சைக்கிள் ஹப்பின் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, இன்றுவரை மொத்தம் 1,100 கிலோ மின் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது, சூழல் சிங்கம் முயற்சியின் வலுவான தொடக்கம் ஆகும்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை மாவட்ட ஆட்சியர் கே. இளம்பகவத், வி. மார்கண்டேயன் எம்.எல்.ஏ, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் எஸ். பிரியங்கா, Deep Cycle Hub நிறுவனர்கள் தீப்தி கேசரினோ மற்றும் ஜோசப் கேசரினோ, சுப்பையா வித்தியாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக புதிய அமைச்சரவை: தூத்துக்குடி எம்.எல்.ஏ ஸ்ரீநாத்திற்கு மீன்வளத்துறை ஒதுக்கீடு!
வியாழன் 21, மே 2026 12:50:33 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் என்டிபிஎல் நிறுவனத்தின் சார்பில் புதிய அரங்குகள் திறப்பு!
வியாழன் 21, மே 2026 12:25:31 PM (IST)

தேசிய நெடுஞ்சாலையில் பைக் விபத்து: வாலிபர் பலி!
வியாழன் 21, மே 2026 11:54:05 AM (IST)

அரசு உதவிபெறும் பள்ளிகளில் வசூல் வேட்டை : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்!
வியாழன் 21, மே 2026 11:30:58 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

தூத்துக்குடியில் பெண் வெட்டிக் கொலை: 2பேர் கைது!
வியாழன் 21, மே 2026 10:52:28 AM (IST)










