» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சுடுகாட்டில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:40:31 AM (IST)
தூத்துக்குடியில் சுடுகாட்டில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி, தாளமுத்துநகர் ஹவுசிங் போர்டு காலனி, காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகன் பிரேம்குமார் (27). இவர் டிரை சைக்கிள் ஓட்டி தொழில் செய்து வந்தார். கடந்த சில தினங்களாக அவர் வேலைக்கு செல்லாததால் அவரது தந்தை திட்டினாராம்.
இதனால் மன வேதனையடைந்த அவர், கோமஸ்புரம் சுடுகாட்டில் உள்ள தகன மேடையில் வைத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து தகவல் அறிந்து தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - தாம்பரம் இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள்: ஏப். 20 முதல் இயக்கம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:11:58 PM (IST)

தூத்துக்குடியில் ஜேசிஐ ஹெர்குலேனியம் எலைட் சார்பில் நீர் மோர் விநியோகம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:42:12 PM (IST)

சட்டவிரோத புகையிலை விற்பனை: 3 பேர் கைது
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:31:01 PM (IST)

தமிழகத்தில் 300% வன்கொடுமைகள் அதிகரிப்பு: விளாத்திகுளத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:15:07 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தேரோட்டம்: அச்சுத்தடி உடைந்ததால் பரபரப்பு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:00:15 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி நிறைவு: ஆட்சியர் ஆய்வு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:30:05 PM (IST)





