» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத் அசெம்பிளி ஆஃப் காட் சபையில் ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டம் : திரளானோர் பங்கேற்பு!
வியாழன் 31, ஜூலை 2025 5:51:08 PM (IST)

நாசரேத் அசெம்பிளி ஆஃப் காட் சபையில் நடந்த ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டத்தில் சபை மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அசெம்பிளி ஆஃப் காட் சபையில் ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டம் 3 நாட்கள் நடந்தது. கூட்டத்தை தூத்துக்குடி பிராந்திய ஏஜி சபைகளின் மேற்பார்வையாளரும், நாசரேத் ஏஜி சபையின் தலைமை போதகருமான சங்கை எட்வின் பிரபாகர் தலைமை வகித்து ஜெபித்து தொடங்கி வைத்தார். பாஸ்டர் சங்கை டேவிட் மெர்வின் பிரபாகர் பாடல் ஆராதனை நடத்தினார்.
தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை கூட்டம் நடந்தது. எழுப்புதல் ஆராதனை, எழுப்புதல் செய்தி, எழுப்புதல் ஜெப நேரம் இடம் பெற்றன. கன்னியாகுமரி பாஸ்டர் ஜஸ்டின் மோசஸ் தேவ செய்தி கொடுத்தார். இதில் நாசரேத், மூக்குப்பீறி ,கடையனோடை, பிரகாசபுரம், மெஞ்ஞானபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாசரேத் ஏஜி சபையின் தலைமை போதகர் சங்கை எட்வின் பிரபாகர் மற்றும் சபை விசுவாசிகள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யுத்த வெறி பிடித்த அமெரிக்கா, இஸ்ரேலைக் கண்டித்து தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
வியாழன் 5, மார்ச் 2026 8:15:26 PM (IST)

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)









