» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக வழக்கறிஞர் அணி முன்னாள் நிர்வாகி பாஜகவில் ஐக்கியம்!
புதன் 30, ஜூலை 2025 3:43:52 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி முன்னாள் பொறுப்பாளரான ஜனார்த்தனன் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.வில் இணைந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூர் முத்துகிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் மறைந்த அரசு வழக்கறிஞரான தாமோதரன் மகன் ஜனார்த்தனன். சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த இவர், தூத்துக்குடி திமுக ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச்செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
மறைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமியின் தீவிர ஆதரவாளர். அதன் பின்பு தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை பொறுப்பாளராக இருந்து வந்தார். இந்நிலையில், ஜனார்த்தனன் அக்கட்சியில் இருந்து விலகி மாநில பா.ஜ., துணைத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான ஆர்.சி.பால் கனகராஜ் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்துள்ளார்.
பா.ஜ.,வில் இணைந்துள்ள வழக்கறிஞர் ஜனார்த்தனனுக்கு மாநில சிறுபான்மையினர் அணி துணைத்தலைவர் அசோக்குமார், தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா, மாவட்ட துணைத் தலைவர்களான வழக்கறிஞர்கள் வாரியர், ஸ்ரீவை முத்துராமலிங்கம், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜோதி டேவிட், மும்பை வழக்கறிஞர் கடோர் கஜோன்நாடார், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட பா.ஜ.,வினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் : 2 பேர் உயிரிழப்பு
திங்கள் 8, ஜூன் 2026 10:06:07 AM (IST)

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பங்கள் வரவேற்பு - கோட்ட மேலாளர் அழைப்பு!
திங்கள் 8, ஜூன் 2026 8:42:53 AM (IST)

கோயில் உண்டியலை உடைத்துத் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 8, ஜூன் 2026 8:36:24 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைேமாதியது: 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
திங்கள் 8, ஜூன் 2026 8:24:55 AM (IST)

மதுப்பழக்கத்தால் குடும்பத் தகராறு மனைவி கோபித்துச் சென்றதால் கணவர் தற்கொலை!
திங்கள் 8, ஜூன் 2026 8:20:06 AM (IST)

பாலியல் புகாரைத் திரும்பப் பெற வலியுறுத்தி தவெக எம்.எல்.ஏ மிரட்டல் - இளம்பெண் பரபரப்பு பேட்டி!
திங்கள் 8, ஜூன் 2026 8:10:55 AM (IST)










