» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு குரூஸ் பர்னாந்து பெயரை சூட்ட கோரிக்கை!
செவ்வாய் 29, ஜூலை 2025 11:26:49 AM (IST)
துாத்துக்குடி புதிய விமான நிலையத்திற்கு, குரூஸ் பர்னாந்து பெயரை "சூட்ட வேண்டும் என்று, ஐ.என்.டி.யு.சி.,மாநில பொது செயலாளர் பெருமாள்சாமி கதிர்வேல் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, முன்னாள் இளைஞர் தலைவரும், மாநில காங்., பொதுக்குழு உறுப்பினரும், ஐ.என்.டி.யு. சி., மாநில பொது செயலாளருமான பெருமாள்சாமி பிரதமர் மோடி, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள, கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது; "நமது முன்னோர்களை, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கவுரவித்து கொண்டிருக்கிறது.
அதன்படி, துாத்துக்குடி விமான நிலையத்திற்கு, குரூஸ்பர்னாந்து பெயரை வைக்க வேண்டும் என்பது தான், இந்த பகுதியை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் விருப்பம் ஆகும். 1909 மற்றும் 1927க்கு இடையில், ஐந்து முறை, துாத்துக்குடி நகராட்சியின் தலைமையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் குரூஸ்பர்னாந்து. அவருக்கு, ராவ் பகதுார் பட்டம் அரசால் வழங்கப்பட்டது.
முனிசிபாலிட்டி கட்டடம் (ராவ் பகதுார் குரூஸ் பெர் னாண்டஸ் பில்டிங்) அவரது பெயரில் பெய ரிடப்பட்டது. துாத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் பாளை.,க்கு துாத்துக்குடியிலிருந்து 38 கி.மீ., தொலைவில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து 1932ம் ஆண்டில் ரூ.18,23,275 செலவில், கூட்டுநீர் வழங்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 1925 மற்றும் 1926ம் ஆண்டுகளில் திட்டத்தின் செலவுகள் ரூ.27,83,765 ஆக அதிகரித்தன.
இந்த தொகையை மானியமாகவும், கடனாகவும் பெற்று 1938ம் ஆண்டு திட்டத்தை நிறைவு செய்தார். துாத்துக்குடி மக்கள் அப்போது குடிநீர் வசதியைப் பெற்றனர். அவரது சிலைகள் நகராட்சி கட்டடத்தின் முன்பும், துாத்துக்குடி நகரின் நடுவிலும் நிறுவப்பட்டுள்ளது. சாதி. மதம் கடந்து காமராஜர் எப்படி வழிபடுகிறோமோ, அதே போல் இவரும் சாதி மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டவர். அவரது பெயரை, துாத்துக்குடி விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
SudhaJul 29, 2025 - 03:31:41 PM | Posted IP 172.7*****
பொறிச்ச பரோட்டா 💀
SOORIYANJul 29, 2025 - 03:14:03 PM | Posted IP 172.7*****
என்ன ஒரு நிலைப்பாடு, யார் யாருக்கு எங்கு பெயர் வைக்க வேண்டும் என்று தெரியாது. விருப்பம் உள்ளவர்கள், அவர்கள் கட்டும் வீட்டிற்கு , உங்களுக்கு பிடித்தவர் பெயரை வைக்கலாம்.
கை வாய்Jul 29, 2025 - 01:49:48 PM | Posted IP 104.2*****
முத்துநகர் என்று வைத்தாலே சரியாக இருக்கும்
பெ.ராஜேஷ் செல்வரதி--தொல்லியல் ஆர்வலர்-தூத்துக்குடிJul 29, 2025 - 11:55:36 AM | Posted IP 162.1*****
தென்னகம் சிறக்க சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நமது தொன்மையான கலாச்சாரம் கொண்ட பாண்டியர்கள் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (அ) மாறவர்மன் குலசேகர பாண்டியன் பெயரினை வைப்பது தான் சாலச்சிறந்தது ஆகும்.
மேலும் தொடரும் செய்திகள்

டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் 80ஆவது சுதந்திர தின விழா
சனி 15, ஆகஸ்ட் 2026 12:54:17 PM (IST)

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:45:24 PM (IST)

ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:34:09 PM (IST)

கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் சுதந்திர தினவிழா : போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழியேற்பு
சனி 15, ஆகஸ்ட் 2026 12:29:44 PM (IST)

ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 11:54:43 AM (IST)

தூத்துக்குடியில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி!
சனி 15, ஆகஸ்ட் 2026 11:45:00 AM (IST)










Thoothukudi kaaranJul 29, 2025 - 07:14:21 PM | Posted IP 172.7*****