» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் விளையாட்டு போட்டி

சனி 5, ஜூலை 2025 4:12:24 PM (IST)



நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.

கல்லூரி முதல்வர் டாக்டர் சோபியா ஞானமேரி தலைமை வகித்து கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். கல்லூரி அலுவலக ஊழியர் ஜாய்சன் ஆரம்ப ஜெபம் செய்தார். போட்டிகளை நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித் செல்வசுந்தர் ஆகியோர் நடத்தினர். 

இதையடுத்து மாணவ மாணவிகளுக்கு 100 மீட்டர்,400 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கைப்பந்து, எறிப்பந்து, ஈட்டி எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 

ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் நீதிபதி ஜான் சந்தோஷம், திருமண்டல பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் தாளாளர் ரமா, திருமண்டல நிர்வாக செயலாளர் கருணாகரன், கல்லூரி முதல்வர் சோபியா ஞானமேரி, மாணவர் செவிலியர் சங்க தலைவர் பேராசிரியர் ரூபன் காலிசன், உதவி பேராசிரியை ப்ரூலின் மெல்சியா மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



Thoothukudi Business Directory