» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விஜயின் அறிவிப்பால் சிலர் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கலாம்: கனிமொழி எம்பி பேட்டி

சனி 5, ஜூலை 2025 11:02:15 AM (IST)



"விஜயின் அறிவிப்பால் சிலர் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கலாம்; த.வெ.க. தனித்து போட்டியிடுவது தி.மு.க.வுக்கு சவாலாக இருக்காது" என்று கனிமொழி எம்பி கூறினார். 

பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நெல்லை மத்திய மாவட்ட தி.மு.கழகம் சார்பில், நெல்லையில் நடைபெற்ற பாக நிலைமுகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி எம்பி கலந்துகொண்டு, தேர்தலுக்கானப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், த.வெ.க. தனித்து போட்டியிடுவது தி.மு.க.வுக்கு சவாலாக இருக்காது. த.வெ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் தான் போட்டி. அவங்க இரண்டு பேருக்கு இடையே வேண்டுமானால் சவாலாக இருக்கும்.நிறைய பேர் தனித்து போட்டியிடலாம். இது அவர்களது தனிப்பட்ட முடிவு. All the best. வெற்றி என்பது நிச்சயமாக தி.மு.க. கூட்டணிக்கு தான். மக்களின் வரவேற்பை பார்க்கும்போது மிகத் தெளிவாக தெரிகிறது.

முதலிலே இருந்தே தமிழ்நாடு ஓரணியில்தான் இருக்கிறது. வேறு யாரை இணைப்பது என்பது முதலமைச்சரின் முடிவு. எங்களோடு, நம்முடைய முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு வரக்கூடிய யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம். விஜயின் அறிவிப்பால் சில பேர் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கலாம். மக்களின் எதிரிகள் யார் என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

தெளிவாக தெரிகிறது.Jul 6, 2025 - 09:57:17 AM | Posted IP 162.1*****

விஜய் திமுகவின் B டீம் சிறுபான்மை ஓட்டுக்களை பிரிப்பதற்க்காக களத்தில் இறங்கியுள்ளார் வெகுவிரைவில் கமல் போல கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் ஐக்கியமாகிவிடுவார் அல்லது (வாய்ப்பு கிடைத்தால்) திரும்ப நடிக்க போய்விடுவார்.

அரசியல் வாதிJul 5, 2025 - 06:48:02 PM | Posted IP 172.7*****

உங்க கட்சி அதிர்ச்சி ஆகாமல் இருந்தால் சரி.

அதுJul 5, 2025 - 12:28:52 PM | Posted IP 172.7*****

திமுகவினர் அதிர்ச்சி .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory