» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை : மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை மேயர் ஆய்வு!

வெள்ளி 4, ஜூலை 2025 11:43:23 AM (IST)



தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோடை காலத்தை முன்னிட்டும் சீரான குடிநீர் வழங்குவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக தபால் தந்தி (P&T) காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வருகின்ற நீரின் அளவையும் மாநகரப் பகுதிகளுக்கு வழங்கப்படும் நீரின் அளவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.

மேலும் இந்த பகுதிகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு சீரான குடிநீர் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். ஆய்வின்போது, வட்ட  செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி  செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் கண்ணன், ராமர்  ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

RAMAR P BRAYANT NAGAR 11TH ST TUTICORINJul 6, 2025 - 03:06:30 PM | Posted IP 104.2*****

எங்கள் பகுதியான பிரையன்ட் நகர் 11வது தெரு கிழக்கு (சிவந்தாகுளம் 1வது தெரு) 5நாட்களாக தண்ணீர் வரவில்லை. Fixed Time குறுப்பிட்ட நேரத்தில் தண்ணீர் வருவதில்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital






New Shape Tailors



Thoothukudi Business Directory