» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி: விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை!
வியாழன் 3, ஜூலை 2025 10:29:32 AM (IST)
தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த துயர சம்பவம் எதிரொலியாக விசைப்படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் பேதுரு மகன் பிலவேந்திரன் (56). மீனவரான இவர், நேற்று காலை விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 9 பேருடன் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளார். இரவு 8 மணி அளவில் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, திடீரென பிலவேந்திரன் கடலுக்குள் தவறி விழுந்துவிட்டாராம்.
இதையடுத்து சக மீனவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தருவைகுளம் மரைன் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ரெனிஸ் வழக்கு பதிவு செய்தார்.
இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து விசாரணை நடத்தி வருகிறார். மீனவர் உயிரிழந்த சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இன்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 272 விசைப்படைகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்!
சனி 11, ஏப்ரல் 2026 8:11:17 PM (IST)

தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் எச்சரிக்கை
சனி 11, ஏப்ரல் 2026 4:44:31 PM (IST)

கார் - பிக்கப் வாகனம் மோதி விபத்து: இளைஞர் பலி!
சனி 11, ஏப்ரல் 2026 4:33:49 PM (IST)

திருமணமான 8 மாதத்தில் இளைஞர் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை !
சனி 11, ஏப்ரல் 2026 4:30:17 PM (IST)

யார் பொறுப்பு? விழிப்புணர்வுத் திரைப்படம்: கலைஞர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு!
சனி 11, ஏப்ரல் 2026 4:05:07 PM (IST)

ஏப்ரல் 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி: தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு
சனி 11, ஏப்ரல் 2026 3:14:31 PM (IST)








NAAN THAANJul 3, 2025 - 08:51:04 PM | Posted IP 104.2*****