» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் பேரவைத் தேர்தல்

புதன் 2, ஜூலை 2025 4:09:23 PM (IST)



தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவியர் பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவியர் பேரவைத் தேர்தல் தேர்தலை கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஜெஸி பெர்னாண்டோ, சுயநிதிப் பிரிவு இயக்குனர் அருட்சகோதரி ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கி துவக்கி வைத்தனர். மாணவியர் 1764 பேர் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை மின்னணு இயந்திரம் மூலம் பதிவு செய்தனர். வாக்குகள் உடனடியாக கணக்கிடப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியானது. 

மாணவர் பேரவை தலைவியாக பொருளியல் 3ஆம் ஆண்டு அன்டோனலா இஜினியா தேர்வு செய்யப்படடார். சுயநிதிப் பிரிவில் வணிகவியல் 3ஆம் ஆண்டு விஷ்ருதி பிரியதர்ஷினி தேர்வு செய்யப்படடார். மேலும், எழில் மகிபா – வணிகவியல் 3ஆம் ஆண்டு, சிபோரா – வணிக மேலாண்மை ஆகியோர் செயலராகவும், அமிர்த ஷர்மினி – ஆங்கில இலக்கியம் 3ஆம் ஆண்டு, அசினா பானு – நுண்ணுயிரியல் 3ஆம் ஆண்டு ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.


மக்கள் கருத்து

உங்களில் ஒருவன்Jul 4, 2025 - 03:09:49 PM | Posted IP 104.2*****

நேர்மையாக நடக்கவில்லை என்று பல மாணவிகள் கூறினார்களே....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



Thoothukudi Business Directory