» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் புதிய நூலகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 10, ஜூன் 2025 3:27:13 PM (IST)

தூத்துக்குடி பேருந்து நிலையம், மருத்துவமணை ஆகிய இடங்களில் புதிய நூலகங்களை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை புத்தகப் பூங்கா, பொது நூலக இயக்ககம் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டடங்கள், பரமக்குடி முழுநேர கிளை நூலகக் கட்டடம் மற்றும் 70 சிறப்பு நூலகங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆகிய நூலகங்களில் குத்துவிளக்கேற்றி வைத்து மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில் "மாநகராட்சி பகுதியில் பல நூலகங்கள் இருந்தாலும் வஉசி கல்லூாி அருகில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் இரவு 11 மணி வரை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதில் மாவட்டத்திலுள்ள மாணவ மாணவிகள் மட்டுமின்றி அருகில் உள்ள நெல்லை தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பலரும் அந்த படிப்பகத்திற்கு வந்து அறிவு பூா்வமான நூல்களை படித்து பயன் பெறுகின்றனா்.
மதுரையில் மிகப்பொிய நூலகம் முதலமைச்சரால் உருவாக்கப்பட்டு தமிழகத்தில் எழுத்தறிவு படிப்பறிவு இல்லாதவா்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்கு கல்வி துறையும் மருத்துவ துறையும் எனக்கு இரு கண்கள் என்று முதலமைச்சர் அரசு விழாக்களில் கூறுவதுண்டு அதையை பின்பற்றி இரு இடங்களில் புதிதாக கிளை நூலகங்கள் திறந்துள்ளோம் இதை அணைத்து தரப்பு மாணவ மாணவிகளும் பயன்படுத்திக்கொண்டு எதிர்கால நலனை வளர்த்து கொண்டு பல சாதனைகள் புாியவேண்டும். என்ற தொலை நோக்கு பார்வையோடு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினாா்.
இந்நிகழ்ச்சிகளில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சிவகுமார், அரசு தலைமை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, துணை மேயர் ஜெனிட்டா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, முதல்நிலை நூலகர் ராம்சங்கர், மண்டல தலைவர் கலைசெல்வி, கவுன்சிலா்கள் கண்ணன் ரெக்ஸ்லின் தனலட்சுமி ராமு அம்மாள் மும்தாஜ் பேபி ஏஞ்சலின் மரியகீதா பவானி நாகேஸ்வரி மரிய சுதா வைதேகி சுப்புலட்சுமி அந்தோணி பிரகாஷ் மார்ஷலின் முத்துவேல் போல்பேட்டை பகுதிபிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா் ஞான மாா்டின், வட்டசெயலாளர் பொன்ராஜ், வட்டப்பிரதிநித அருணகிாி, மேயாின் நோ்முக உதவியாளா்ரமேஷ், உள்பட பலர் உடனிருந்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 20, ஜூன் 2025 5:13:36 PM (IST)

திருச்செந்தூர் கோட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:05:59 PM (IST)

தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 4:46:44 PM (IST)

கள் இறக்கிய சீமானை கைது செய்ய வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
வெள்ளி 20, ஜூன் 2025 4:02:32 PM (IST)

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நெல்லையிலிருந்து இயக்கம்
வெள்ளி 20, ஜூன் 2025 3:07:30 PM (IST)

அமைச்சர் டிஆர்பி ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார்!
வெள்ளி 20, ஜூன் 2025 12:47:09 PM (IST)
