» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் உலக ஒய்.எம்.சி.ஏ. தினவிழா: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!

செவ்வாய் 10, ஜூன் 2025 3:19:53 PM (IST)



நாசரேத்தில் உலக  ஒய்.எம்.சி.ஏ. தின விழாவையொட்டி 5 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் லண்டனில் கடந்த 1844 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி, சர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர்  இளம் ஆண்கள் கிறிஸ்தவ சங்கம்  ஒய்.எம்.சி.ஏ. என்ற அமைப்பை நிறுவினார். ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் உலகம் முழுவதும் ஒய்.எம்.சி.ஏ. தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள  ஒய்.எம்.சி.ஏ. கூட்ட அரங்கில் வைத்து 181 வது ஒய்.எம்.சி.ஏ. தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு ஆரம்பமாக மூக்குப்பீறி சி.எஸ்.ஐ. தூய மாற்கு ஆலய  சேகரத் தலைவர் குருவானவர் ஞானசிங் எட்வின ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. தலைவர் ஆம்ஸ்ட்ராங் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக நாசரேத் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவர் குரு. மத்தேயு ஜெபசிங் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

ஒய்.எம்.சி.ஏ. தென் மண்டல  மேம்பாட்டுச் செயலர் ஜான் போஸ், நெல்லை மண்டல செயலர் பொன்ராஜ், நிர்வாக குழு உறுப்பினர் இரஞ்சன், ஒருங்கிணைப்பாளர் லேவி அசோக் சுந்தரராஜ் ஆகியோர் ஒய்.எம்சி.ஏ. தோன்றிய வரலாற்று சிறப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார்கள்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நாசரேத்தில் உள்ள நல்ல சமாரியன் மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லம், திருமறையூர் முதியோர் இல்லம், காது கேளாதோர் இல்லம், தைலாபுரம் கல்வாரி சேப்பல் மாணவர் இல்லம்ஆகிய ஐந்து அமைப்புகளுக்கு நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிறைவாக ஒருங்கிணைப்பாளர் எபநேசர் நன்றியுரையாற்றினார். இவ் விழாவில் ஆசிரியர்கள் ஸ்டெப்பின்ஸ், லவ்சன், விவின் ஜெபக்குமார் உட்பட ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors



CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory