» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக ஆட்சி நீடிக்கக்கூடாது: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு!
செவ்வாய் 10, ஜூன் 2025 12:12:26 PM (IST)

ஆண்டவனையே பழிக்கக்கூடிய திமுக ஆட்சி தர்மத்தின் படி நீடிக்கக்கூடாது என்று விளாத்திகுளத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கே.குமாரபுரம் கிராமத்தில், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமையில், விளாத்திகுளம் மேற்கு ஒன்றியம் மற்றும் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியங்களான கே.குமாரபுரம், படர்ந்தபுளி, பிள்ளையார்நத்தம், நீராவிப்புதுப்பட்டி, செமப்புதூர் உள்ளிட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றியச் செயலாளர் மகேஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ கட்சியினரிடம் பேசுகையில், தற்போது தமிழக மக்களுக்காக அதிமுக கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது, காலணி முதல் கம்ப்யூட்டர் வரை கொடுத்த ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா-தான் என்று கூறி அதிமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவோம் என்றும் கூறினார்.
மேலும், தமிழகத்தில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு தமிழக அரசு காட்டி வரும் எதிர்ப்பை சுட்டிக்காட்டி, ஆண்டவனையே பழிக்கூடிய இந்த ஆட்சி மக்களை விட்டுவைப்பார்களா, இந்த தர்மத்தின்படி நீடிக்கக்கூடாது என பேசினார். இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து கட்சியினருக்கு ஆலோசனை வழங்கி பூத் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியலை கட்சியினர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ-யிடம் வழங்கினர்.
இந்நிகழ்வில், இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், ஒன்றிய செயலாளர்கள் போடுசாமி, தனபதி, அன்புராஜன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார்,ஒன்றிய கவுன்சிலர் குட்டி என்ற வைணன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 20, ஜூன் 2025 5:13:36 PM (IST)

திருச்செந்தூர் கோட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:05:59 PM (IST)

தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 4:46:44 PM (IST)

கள் இறக்கிய சீமானை கைது செய்ய வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
வெள்ளி 20, ஜூன் 2025 4:02:32 PM (IST)

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நெல்லையிலிருந்து இயக்கம்
வெள்ளி 20, ஜூன் 2025 3:07:30 PM (IST)

அமைச்சர் டிஆர்பி ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார்!
வெள்ளி 20, ஜூன் 2025 12:47:09 PM (IST)
