» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு
செவ்வாய் 10, ஜூன் 2025 10:23:14 AM (IST)
தூத்துக்குடி அருகே வீட்டு வாசலில் பாய் விரித்து படுத்திருந்தபோது, பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகில் உள்ள தெற்கு கோடாங்கிபட்டி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் சந்திரவேல் (60), விவசாயி. இவர் நேற்று இரவு இரவு 10 மணியளவில் தனது வீட்டு வாசலில் பாய் விரித்து படுத்து தூங்கினாராம். அப்போது ஒரு பாம்பு அவரை கடித்துள்ளது.
இதையடுத்து அரது மகன் ஜெயக்குமார் கார் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மேகலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - தாம்பரம் இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள்: ஏப். 20 முதல் இயக்கம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:11:58 PM (IST)

தூத்துக்குடியில் ஜேசிஐ ஹெர்குலேனியம் எலைட் சார்பில் நீர் மோர் விநியோகம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:42:12 PM (IST)

சட்டவிரோத புகையிலை விற்பனை: 3 பேர் கைது
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:31:01 PM (IST)

தமிழகத்தில் 300% வன்கொடுமைகள் அதிகரிப்பு: விளாத்திகுளத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:15:07 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தேரோட்டம்: அச்சுத்தடி உடைந்ததால் பரபரப்பு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:00:15 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி நிறைவு: ஆட்சியர் ஆய்வு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:30:05 PM (IST)





