» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுரை - தூத்துக்குடி சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை நீக்கம் : உச்சநீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 10, ஜூன் 2025 8:31:40 AM (IST)

மதுரை - தூத்துக்குடி இடையிலான சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, ‘மாதம் ரூ.11 கோடி வசூலிக்கும் நிலையில் சாலை பராமரிப்புக்கு ரூ.30 லட்சம் மட்டுமே செலவு செய்வதாக தொடர்ந்த வழக்கில், மதுரை - தூத்துக்குடி இடையே 2 சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க அதிரடியாக கடந்த 3-ந்தேதி தடை விதித்தது. 

இந்த தடை உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, மன்மோகன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வெங்கட்ராமன், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

பாலகிருஷ்ணன் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, அனைத்து அம்சங்களையும் உயர்நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது. உரிய பராமரிப்பு இல்லாமல் சுங்கக்கட்டணம் வசூலிப்பது பகல் கொள்ளை என வாதிட்டார். இருதரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் மதுரை-தூத்துக்குடி இடையிலான சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதித்த உயர்நீதிமன்றம் தடையை நிறுத்தி வைத்தது. மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க பாலகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டது.


மக்கள் கருத்து

SeenivasagamJun 10, 2025 - 03:09:49 PM | Posted IP 172.7*****

எல்லாம் காசு தான் தீர்ப்பு மாறுது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory