» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் கொலை வழக்கில் 4பேரை கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு

திங்கள் 9, ஜூன் 2025 4:13:05 PM (IST)



பெண் கொலை வழக்கில் 2 ஆண்டுகள் தீர்வின்றி இருந்துவந்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி 4பேரை கைது செய்த தனிப்படை காவல் துறையினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டு தெரிவித்தார்.

நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த பெண் கொலை வழக்கில் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து 2 ஆண்டுகள் தீர்வின்றி இருந்து வந்த நிலையில மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 எதிரிகளை கடந்த (07.06.2025) கைது செய்தனர்.

மேற்படி கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக விசாரணை மேற்கொண்டு எதிரிகளை கைது செய்த மேற்படி தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (09.06.2025) சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory