» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மீன்பிடி இறங்குதளம் உடைந்து லாரி சிக்கியது: தூத்துக்குடி அருகே பரபரப்பு
ஞாயிறு 8, ஜூன் 2025 7:35:23 PM (IST)

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீன் இறங்குதளம் உடைந்து விழுந்து லாரி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் கடந்த மாதம் 15-ந் தேதி முதல் அமலில் உள்ளது. இந்த தடைக்காலம் வருகிற 15-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இதனை தொடர்ந்து விரைவில் தடைக்காலம் முடிவடைய இருப்பதால் மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவர்கள் தற்போது முதல் படகுகளில் ஐஸ் கட்டிகளை ஏற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று நாட்டுப்படகுகள் தொடர்ந்து கடலுக்கு சென்று வருவதால் நாட்டுப்படகுகளுக்கும் ஐஸ் கட்டிகளை ஏற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், தருவைகுளம் மீன் இறங்குதளத்தில் உள்ள படகுகளில் ஏற்றுவதற்காக ஒரு கன்டெய்னர் லாரியில் ஐஸ் கட்டிகள் கொண்டு வரப்பட்டன. அந்த லாரி இறங்குதளத்தில் சென்ற போது திடீரென மீன்பிடி இறங்குதளம் உடைந்து பெரியஓட்டை விழுந்ததால், லாரியின் பின்பக்க டயர் சிக்கிக் கொண்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக கிரேன் கொண்டு வரப்பட்டு மீன்பிடி இறங்குதளத்தில் சிக்கிய லாரி மீட்கப்பட்டது. மேலும் இறங்குதளம் உடைந்து போயுள்ளதால், அந்த பகுதியில் லாரிகள், மீன்வண்டிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனால் உடைந்த பாலத்தை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 20, ஜூன் 2025 5:13:36 PM (IST)

திருச்செந்தூர் கோட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:05:59 PM (IST)

தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 4:46:44 PM (IST)

கள் இறக்கிய சீமானை கைது செய்ய வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
வெள்ளி 20, ஜூன் 2025 4:02:32 PM (IST)

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நெல்லையிலிருந்து இயக்கம்
வெள்ளி 20, ஜூன் 2025 3:07:30 PM (IST)

அமைச்சர் டிஆர்பி ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார்!
வெள்ளி 20, ஜூன் 2025 12:47:09 PM (IST)
